இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை கவலை தெரிவிக்கிறார் இங்குள்ள ஐ.நா. பிரதிநிதி

JKR  வெள்ளி, 7 மே, 2010

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்கான எதுவித வாய்ப்பும் அற்ற நிலையிலேயே வன்னி யிலுள்ள தமது பகுதிகளில் மீளக் குடியேற் றப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புஹ்னே தெரிவித்துள்ளார். அரசு மீளக்குடியேறுபவர்களுக்கு வழங்கும் நிதியுதவி மிகத் தாமதமாகவே அவர்க ளைச் சென்றடைவதாகவும் குறிப்பிட் டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

இடம் பெயர்ந்த மக்கள் தமது பகுதிக
ளுக்கு மீண்டும் செல்லும்போது அவர்களுக்குத் தொழில்வாய்ப்புகள் இருப்பது மிக முக்கியமானது.
இதன்மூலமே அவர்கள் தமது காலில் தாங்கள் நிற்கக் கூடிய நிலையை உருவாக்கலாம்.
எனினும், இவர்கள் அநேகமாக வருமானம், உழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையிலேயே மீளக் குடியேற்றப்படுகின்றனர்.
மீளக் குடியேறும் மக்களுக்கான பொருளாதார அடிப்படையை மீளக் கட்டியெழுப்புவதற்காக சந்தைகள், பாடசாலைகள், சுகாதார நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்.
எனினும், இதற்கு குறிப்பிடத்தக்க காலமும் எதிர்வரும் வருடங்களில் எமது சக நிறுவனங்களின் தீவிர முயற்சியும் தேவைப்படும்.
துரித புனர்வாழ்வு, மீள் எழுச்சித் திட்டத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்தும் ஐ.நா. கவனம் செலுத்துகின்றது என்றார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr