இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய அணிக்கு 6 விக்கெட் வெற்றி

JKR  திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ம்புள்ளையில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகளால் தோற்கடித்தது
.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.1 ஓவர்களில் 170 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக திலகரட்ண தில்ஷான் 45 ஓட்டங்களையும் சுராஜ் ரந்தீவ் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க (0) குமார் சங்கக்கார (2), மஹேல ஜயவர்தன (4), திலான் சமரவீர (7) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தால் இலங்கை அணி ஆரம்பத்திலேயே பெரும் சரிவைக் கண்டது.
இந்திய பந்துவீச்சாளர்களில் பிரக்யன் ஓஜா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 32 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்தது. கார்த்திக் 10 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி, இஷாந்த் சர்மா ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் ,வீரேந்தர் ஷேவாக் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 100 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களைப் பெற்றார். சுரேஷ் ரெய்னா 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றார்.
இதனால் இந்திய அணி 34.3 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்துவெற்றி இலக்கை அடைந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr