இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மக்களின் செயற்பாட்டுக்கு அரச அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

JKR  வியாழன், 26 ஆகஸ்ட், 2010

க்களின் செயற்பாட்டுக்கு அரச அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.புகைப்படம் இணைப்பு
இன்று (23) காலை சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற சங்கானை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் அனைவரும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். நீங்கள் சேவை செய்யும் போது உங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் மக்கள் நலன்களுக்காக தியாகம் செய்யக் கூடிய வகையில் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் தொழிற்சாலைகளை வெகுவிரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அங்கு வருகை தந்த மின்சாரம் கல்வி போக்குவரத்து விவசாயம் கடற்றொழில் கூட்டுறவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் பிரதேச சபை அதிகாரிகள் ஈ.பி.டி.பி.யின் வலிகாம பிரதேச இணைப்பாளர் ஜீவன் திணைக்கள அதிகாரிகள் கிராம சேவகர்கள் மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr