இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை அணியினருக்கு பலமும் தைரியமும் கிட்டவேண்டும்: பிரதமர் _

JKR  சனி, 2 ஏப்ரல், 2011

மும்பையில் இன்று நடைபெறுகின்ற பத்தாவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இலங்கையரினதும் எதிர்பார்ப்பாக இருப்பதாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி வீரர்களுக்கு தைரியமும் பலமும் கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

30வருடகால யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேசத்தின் வெற்றி நாயகனாகத் திகழ்கிறார். அவரது தலைமையின் கீழ் எமது நாட்டை புதிய இலக்குகளை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டியுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கிண்ணத் தொடருடன் இணைந்திருக்கின்றது. 1996 இல் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த பெருமையுடன் 2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தையும் வென்றெடுப்பதற்கான தருணம் கிட்டியிருக்கின்றது. இது ஒட்டு மொத்த இலங்கையரின் எதிர்பார்ப்பாகும்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr