இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பான் கீ மூனின் இலங்கை விஜயம் சரியாக காட்டப்படவில்லை

JKR  புதன், 22 ஜூன், 2011

பி ரித்தானிய செனல் - 4 செய்திச் சேவையினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தில் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் வடபகுதிக்கு செய்த விஜயம் சரியாக காட்டப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்தது.

'செயலாளர் நாயகம் அவசரமானதாக இல்லாதொரு விஜயமொன்றை மேற்கொண்டு ஓர் அகதி முகாமுக்கு சென்றார். அந்த முகாமிலிருந்த அகதிகள் சிலருடன் அவர் பேசினார். இந்த விஜயம் அந்தப் படத்தில் சரியாக காண்பிக்கப்படவில்லையென செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மாட்டின் நெஸெர்கி ஊடகங்களுக்கு கூறினார்.
ஐ.நா. நியமித்த குழுவின் அறிக்கையை அவரே அலட்சியப்படுத்துகின்றாரென்ற கருத்தை நிராகரித்த நெஸெர்கி, இலங்கையின் தேசிய பொறிமுறையூடாக நடைபெறும் தொடர்ச்சியான செயல்முறையை ஐ.நா.செயலாளர் நாயகம் அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நாம் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சம்மதம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றின் பணியாணை தேவை. இதேவேளை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு செனல் - 4 ஆவணப்படம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதுபற்றி தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr