இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் உரிமை மனு விசாரணை மே 29 இல் தமிழ்பேசும் நீதியரசர்கள் முன்னிலையில்

JKR  வெள்ளி, 27 ஜனவரி, 2012

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் நிர்வாக சர்ச்சை தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனு மீதான உயர் நீதிமன்ற விசாரணையை தமிழ் பேசும் நீதியரசர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இந்த மனு நேற்று (26) நீதியரசர்கள் சலீம் மார்சூப், கே.ஸ்ரீபவான் மற்றும் எஸ்.ஐ.இமாம் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
நீதிமன்றம் விசாரணையை மே மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், இந்த மனு தமிழ் பேசும் நீதியரசர்களான சலீம் மார்சூப், கே.ஸ்ரீபவான் மற்றும் எஸ்.ஐ.இமாம் ஆகியோரை உள்ளடக்கிய நீதிமன்றமே மேற்கொள்ளும் என முடிவு செய்தது. முறிகண்டி பிள்ளையார் கோவிலை தன்னிடம் திருப்பி ஒப்படைக்கக் கோரி அதன் பரம்பரைவழி தர்மகர்த்தா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் ஏற்கனவே விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுவிட்டது. மனுதாரர் ஜி. மணிவண்ணன் தனது மனுவில் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் உட்பட 14 பேர்களை எதிர்மனுதாரர்களாக குறிப்பிட்டிருந்தார். முறிகண்டி பிள்ளையார் கோவில், ஏ-9 கண்டி வீதியில் அமைத்துள்ள புராதன இந்துக் கோவிலாகும். 1990 ஆம் ஆண்டு, இந்தக் கோவிலை, விடுதலைப்புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்;ட பின்னர், அதன் பரிபாலனத்தை இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் நடத்திவருகிறது. மனுதாரர் சார்பில எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மோஹன் பாலேந்திரர் ஆஜரானார்கள். சட்ட மாஅதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ரஜிவ் குணதிலக்க ஆஜரானார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சார்பில் ஏ.முத்துக்கிருஷ்ணன் ஆஜரானார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr