இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சத்தியசீலன் அச்சுவேலியில் மறைந்திருந்த போது கைது

JKR  ஞாயிறு, 29 ஜனவரி, 2012


னந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் கடந்த 23ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். அச்சுவேலி பிரதேசத்தில் 34 வயதான சத்தியசீலன் பாக்கியராஜ் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றும் இவர், விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலைக்கு சென்றபோது இனந்தெரியாதோர் சிலரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி திருகோணமலைஇ துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, திருகோணமலை பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார மற்றும் திருகோணமலை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்தன ஆகியோரின் பணிப்புரைக்கமைய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுர பிரேமசந்த மேற்கொண்ட விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட சத்தியசீலன் பாக்கியராஜ, அவரின் கையடக்க தொலைபேசியின் உதவியுடனேயே கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளிடம் காணாமல் போனது போன்று நடித்த பின்னர் அச்சுவேலி பிரதேச பெண்ணொருவரை திருமணம் செய்ய அவர் தயாராகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். சத்தியசீலன் பாக்கியரா திருமணம் செய்யவிருந்த பெண்மனியின் தயாரே, இது தொடர்பான வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி பி.நவரம்பாவனவின் அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.நந்தல மற்றும் ஐ.சுரேஷ் குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்புடை செய்தி:

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr