இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

களத்தில் இருக்கும் போது தகாத வாரத்தைகளால் திட்டுகின்றனர்: கோலி

JKR  வெள்ளி, 27 ஜனவரி, 2012


ளத்தில் இருக்கும் போது அவுஸ்திரேலிய வீரர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக இந்தியாவின் விராத் கோலி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கோலி கூறுகையில்,
களத்தில் இருக்கும் போது அவுஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து தகாத வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர். இதன் மூலம் இந்திய துடுப்பாட்ட வீரர்களின் கவனத்தை சிதறடிக்கின்றனர். நான் 99 ஓட்டங்களை பெற்று இருந்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினேன். அப்போது ஹிலபெனாஸ் மோசமான வார்த்தைகளால் திட்டினார். இதை நாகரிகம் கருதி வெளியில் சொல்ல முடியாது. இதற்கு நானும் பதிலடி கொடுத்தேன். பின் பொண்டிங் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். நாங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள். போட்டியில் பங்கேற்க தான் அவுஸ்திரேலியா சென்றுள்ளோம்;. அவ்வீரர்களிடம் திட்டு வாங்குவதற்காக அல்ல. ரசிகர்களும் மோசமாக நடந்து கொள்கின்றனர். பதிலுக்கு நான் ஏதாவது செய்தால் (சிட்னி டெஸ்டில் நடுவிரலை காட்டியது) அபராதம் விதிக்கின்றனர். முதல் சதம் அடித்த போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்று விரைவாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது என கோலி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr