இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத் பொன்சேகாவின் கைது விவகாரம் அரசியலாக்கப்படக் கூடாது: அரசாங்கம்

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாக அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிவித்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இக்கருத்தினை வெளியிட்டார்.

“இராணுவத்தின் 57ஆம் இலக்க 1ஆம் பிரிவுச் சட்டத்தின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் எந்தவித அரசியல் நோக்கங்களும் இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டுப் படைகளின் பிரதானியாக பதவி வகித்த காலத்தில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளாததற்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இராணுவ வீரர் அல்லது அதிகாரியொருவர் மீது குற்றம் சுமத்தப்படின் அது தொடர்பாக முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr