இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


கிரேக்க விமானநிலையம்
கிரேக்க விமானநிலையம்

கிரேக்க அரசின் பொருளாதார திட்டங்களுக்கு எதிர்ப்பு

கிரேக்க நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள மாபெரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசங்கம் கொண்டுள்ள திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் அரசுத்துறை ஊழியர்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன, மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன.

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதில் தமது அரசாங்கம் சிரத்தையாக உள்ளது என கிரேக்கப் பிரதமர் ஜார்ஜ் பாபாந்திரியூ கூறியுள்ளார்.

யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளால் கிரேக்கத்துக்கு நிதி உதவி கிடைக்கும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருவவதாக பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்.


பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 13 பேர் சாவு

தாக்குதல் நடந்த இடம்
தாக்குதல் நடந்த இடம்
பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் பொலிஸ் வாகனத் தொடரணி ஒன்றின் மீது நடந்துள்ள குண்டுத் தாக்குதலில் பொலிசார் ஆறு பேர் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டு என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பொலிசார் சென்ற வாகனத்ததின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு காரோடு வந்து தற்கொலை குண்டுதாரி மோதி வெடிக்கச் செய்ததாக வேறு சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானுடனான எல்லையை ஒட்டிய கைபர் பழங்குடியினப் பகுதியில் முக்கிய நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.


ஆப்கான் பனிச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட குகைப் பாதை
பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட குகைப் பாதை

ஆப்கான் தலைநகர் காபூலுக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்ற பல பனிச்சரிவு சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூற்று அறுபத்து ஐந்தாக உயர்ந்துவிட்டது.

தலைநகர் காபூலையும், வடக்கேயுள்ள மலார்-இ-ஷெரிப் நகரையும் இணைக்கும் சலாங் குகைப் பாதையிலிருந்து மட்டும் நூற்றுக்கும் அதிகமான உடல்கள் செவ்வாய் இரவு மீட்கப்பட்டன.

மூன்றாவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த குகைப் பாதையின் கீழே பனிக் குவியலுக்குள் கீழே, சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுக்கள் தேடி வருகின்றன.

பயணிகள் பிராயாணித்த பல வாகனங்கள், பனியில்- ஆழமான மலைப் பள்ளத்தாக்குக்குள் அடித்துச் செல்ப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்


திறந்தவெளியில் தகனம் செய்யும் உரிமையை பெற்றார் பிரிட்டனில் வசிக்கும் இந்து

இந்துக்களில் பலர் சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்று நம்புகின்றனர்
இந்துக்களில் பலர் சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்று நம்புகின்றனர்

பிரிட்டனில் வசிக்கும் இந்து ஒருவர், தான் இறந்த பிறகு திறந்த வெளியில் தகனம் செய்யப்படும் உரிமையை சட்டப்படி வென்றுள்ளார்.

பிரிட்டனின் சட்ட விதிமுறைகளின் படி உடலங்களை எரியூட்டும் கூடங்களில் மட்டுமே தகனம் செய்ய முடியும். எனவே 71 வயதான தேவாந்தர் காய் தான் இறந்த பிறகு தனது உடல் திறந்த வெளியில் தகனம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை அவரது உள்ளூராட்சி அதிகார சபை மறுத்துவிட்டது.

ஒரு நல்ல மரணத்துக்கும், இறந்த பிறகு தனது ஆன்மா உடலில் இருந்து விடுபட்டுச் செல்லவும் திறந்த வெளி தகனம் மிகவும் அவசியம் என்று வாதிட்ட காய் அவர்கள், இது தொடர்பான சட்டத்தில் தெளிவை பெறவே தான் வழக்கை தொடுத்தாக கூறினார்.

செய்தியரங்கம்
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் குண்டு வீசினர்
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் குண்டு வீசினர்

கொழும்பில் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் கலவரம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில், தலைநகர் கொழும்பின் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் இடை யே கலவரம் மூண்டதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

பொன்சேகாவின் விடுதலை கோரி அவரது மனைவி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பெரும் ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்காக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் உயர்நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக வந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சுமார் ஐம்பது பேர் அவ்வூர்வலத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி கலைக்க முயன்றனர்.

முதலில் கலைந்து ஓடினாலும் பின்னர் ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தங்களுடன் மோதிய ஆளுங்கட்சி ஆதரவாளர்களை திருப்பித் தாக்கி விரட்டியடித்து ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

இத்தருணத்தில் பொலிசாரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர்.

நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். வளாகத்துக்கு வெளியே பொலிசார் அமைத்திருந்த தடைகளை உடைத்து நீதிமன்றத்துக்குள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நுழைந்திருந்தனர்.

கலகத்துக்குப் பின்னர் அனோமா பொன்சேகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் புதிய தளபதி ஜெகத் ஜெயசூரிய, திங்கள் இரவு சரத் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்றிருந்த மூத்த இராணுவ அதிகாரி சுமித் மானவடு உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

எதிர்க்கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கைதாகியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் கொல்லப்படுவார் என்று தாங்கள் அஞ்சுவதாக எதிர்கட்சிகள் இன்று கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

சரத் பொன்சேகா மீதான இராணுவ குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆதராங்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இராணுவ உறுப்பினராக இருந்தபொழுதே அரசியல் வாதிகளுடன் இணைந்து செயலாற்றியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா மறுக்கிறார்.


பொன்சேகா கைது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் -ஆய்வு

ஆய்வாளர் கீத பொன்கலன்
ஆய்வாளர் கீத பொன்கலன்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் இருக்கும் நிலையில், தற்போது சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவம் காரணத்தால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, தணிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் இலங்கை அரசியல் பகுப்பாய்வாளர் கீத பொன்கலன்.

தேர்தல்கள் நடைபெற இன்னும் காலம் இருப்பதால், இந்தக் கைது சம்பவம், தேர்தல்கள் சுமுகமாக நடப்பதைக் குழப்பிவிடும் என்று நம்புவதற்கு பெரிய இடமளிக்கவில்லை என்றார் அவர்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், தென்னிலங்கையில் பெருவாரியான ஆதரவு பெற்றுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் நடந்த இந்த கைது சம்பவத்தின் விளைவாக, நாடாளுமன்றத்தேர்தலில், மக்கள் ஆதரவு குறைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, இது பெரிய அளவில் மாறுவதற்கான வாய்ப்பில்லை என்றார் கீத பொன்கலன்.

கொள்கை ரீதியாக வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி, ஒரே அணியில் திரண்டன. அந்தக் கூட்டணி ஒன்றாக நீடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், சரத் பொன்சேகாவின் கைது நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்தக் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது என்றார் கீத பொன்கலன்.

கீத பொன்கலனின் இந்தப் பேட்டியை இன்றைய செய்தியரங்கில் நேயர்கள் கேட்கலாம்.


பொன்சேகா கைது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய அரசின் சார்பில் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் அந்தக் கைது நடவடிக்கை குறித்து விமர்சித்திருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதேசிகன் கூறும்போது, யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை எதி்ர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr