இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகாவின் கைதினை கண்டித்து இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்

JKR  செவ்வாய், 9 பிப்ரவரி, 2010


கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்படவில்லை. அவர் சர்வாதிகாரத்தின் ஊடாக பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சர்வாதிகார போக்கை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய சத்தியாக்கிரகப் போராட்டங்களை ஆரம்பிப்பதற்கு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன்பிரகாரம் கொழும்பு அளுத்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை மற்றும் அவரது உடல்நலத்துக்காகவும் நாடு தழுவிய ரீதியில் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் பொது மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெனரல் பொன்சேகா தொடர்பில் இடம்பெற்றுள்ள இந்த மோசமான நடவடிக்கைள் குறித்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டு நேற்று அறிவித்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் பிரதி தலைவர் கரு ஜயசூரிய ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ரவூப் ஹக்கீம்

இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கூறுகையில்;

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) நடத்தப்பட்ட விதமானது இந்நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கியுள்ளதை அர்த்தப்படுத்தியுள்ளது. படைத்தளபதி ஒருவருக்கு இன்றைய அரசாஙகம் கொடுத்திருக்கின்ற கௌரவம் இதுவாகத்தான் அமைந்துள்ளது.

எமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஜெனரல் பொன்சேகாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அங்கு வந்த இராணுவ பொலிஸார் மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டதுடன் அவரை கைது செய்வதாக கூறி கைகளையும் கால்களையும் பிடித்து இழுத்து தூக்கிச் சென்றதை காண முடிந்தது. இது மிகவும் அருவருக்கத்தக்க செயற்பாடாகும். இங்குதான் அரசாங்கத்தின் சர்வாதிகாரம் தலைதூக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு வாரகாலம் முடிவதற்குள்ளேயே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சர்வாதிகார கெடுபிடிகளை நிராகரிப்பதுடனோ அல்லது அவற்றை கண்டிப்பதுடனோ நிறுத்தி விடாது இதற்கு காரணமான இன்றைய அரசாங்கத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று உறுதிகொள்ளவேண்டியவர்களாக எமது மக்கள் இருக்கின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எமது மக்களின் ஒற்றுமை எவ்வாறு தென் பட்டதோ அதே பாங்கில் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எமது ஒற்றுமையை நிலைநாட்டி சர்வாதிகார ஆட்சிக்கும் அதன் அரசாங்கத்துக்கும் முடிவு கட்டுவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் தயாராவோம் என்றார்.

மங்கள சமரவீர

இங்கு கருத்து தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி,

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நேற்று நடைபெற்றதைப்போன்ற சம்பவம் ஒன்று திரைப்படங்களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கின்றோம். அவ்வாறானதொரு சம்பவம் நேற்று (நேற்று முன்தினம்) இங்கு இடம்பெற்றது. ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதாகவே பத்திரிகைகளிலும் வேறு ஊடங்களிலும் செய்திகள் வெளியாகின. இது தவறானது. ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டார் என்று கூறுவதே பொருத்தமானது.

நாட்டை மீட்டெடுத்த தளபதியும் 40 இலட்சம் மக்களின் வாக்குகளை வென்றவருமான ஜெனரல் சரத் பொன்சேகா பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 150 க்கும் அதிகமான இராணுவத்தினரால் இவ்வலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டு அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த எமது அறைக்குள் அனுமதியின்றி புகுந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா பொல்ஹேன்கொடவில் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. அதன் பின்னர் கடற்படை தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் பாதுகாப்பு அமைச்சில் அவர் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல்கள் எதிலும் எமக்கு நம்பிக்கையில்லை. இதுவரையில் அவர் எங்கு இருக்கின்றார் என்ற தகவலே தெரியாதுள்ளது.

கடந்த 2006 இல் தாக்குதலுக்கு இலக்கான அவர் தொடர்ந்தும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றார். எனினும் அவர் இங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டதிலிருந்து இதுவரையில் அவருக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்படவில்லை. அவரது இந்த அத்தியாவசிய தேவையை நிறைவேற்றுவதற்கு பொன்சேகாவின் பாரியார் பிரயத்தனப் பட்டபோதிலும் அது பலனளிக்கவில்லை.

இறுதியாக அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை தொடர்புகொண்டு அந்த அமைப்பினூடாகவாவது பொன்சேகாவுக்கு மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது தொடர்பில் முயற்சித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட துக்கத்திலிருந்த அனோமா பொன்சேகா தான் தனிமையில் இருந்தபோது அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சென்ற இரகசிய பொலிஸார் அங்கு பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளதுடன் அவரை இரண்டு மணிநேர விசாரணைகளுக்கும் உட்படுத்தியுள்ளனர். இது எந்தளவு மோசமானது என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.

எனவே ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் நிலை அவரது பாதுகாப்பு மற்றும் விடுதலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு இன்றைய தினம் நாடு முழுவதும் சகல மதத்தவர்களும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் என்ற வகையில் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr