இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) சித்தார்த்தன் தலைமையிலான தமிழ்ஈழ விடுதலை கழகம் ஆகிய இரு கட்சிகள் ஒன்று சேர்ந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

JKR  செவ்வாய், 6 ஏப்ரல், 2010

Loogix.com. Animated avatars.

மோகன்

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!

மூன்று கால சகாப்த்தத்துக்கு மேலான வேதனைகள், சோதனைகள், கோபங்கள், பேதங்கள், பொறாமைகள், காட்டிக்கொடுப்புகள், அமைதியின்மைகள் எல்லாமே இன்று ஓய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன.வசந்தத்தை நோக்கி எமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. குண்டுகளின் இரைச்சலுக்கு பதிலாக குயில்களின் ஓசை தெளிவாக கேட்;கின்றன. இப்போதல்லெல்லாம் வீதியோர நாய்கள் சப்பாத்து ஓசை கேட்டு குலைப்பதில்லை. இராணுவ வாகனங்கள் பவனி வருவதில்லை, பங்கர் கிடங்குகள் குப்பைகள் புதைப்பதற்க்கு மட்டும் பயன்படுகின்றன, எமது நிலங்கள் மிதி வெடிகளுக்கு விடை கொடுத்து வண்ணச்செடிகளுக்கு வழி விட்டு நிற்க்கின்றன. மரணங்கள் பழையபடி இயற்க்கையின் இயல்புக்கு திரும்புகின்றன. திருவிழாக்கள், திருமண கொண்டாட்டங்கள் இழந்து போன எமது சந்தோசங்களை மீட்டுத்தர தொடங்கியிருக்கின்றன. மிக விரைவில் யாழ்தேவி புகையிரத்தின் அதிகாலை கடகட ஓசைகள் கூட எமது காதுகளில் கேட்க்க தொடங்கிவிடும். பள்ளி சென்ற மாணவர்கள் மறுபடியும் வீடு திரும்புவார்கள் என்ற நிம்மதியுடன் பெற்றவர்கள் பெருமூச்சு விடத்தொடங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் இழப்புக்களின் வடுக்களை தவிர மக்கள் தங்கள் எதிர்கால கனவுகளுடன் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள்.


அமைதி, அமைதி அமைதி ஒன்றே எமக்கு அத்தனையும் என்று யாவரும் உணரத்தொடங்கியிருக்கின்றோம். இத்தனையையும் நாம் புதிதாக பெற்றிருக்கிறோமா? என்றால் இல்லவே இல்லை அத்தனையும் நாம் மூன்று கால சகாப்த்தமாக புலிகளின் காலத்தில் தொலைத்து விட்டிருத்தோம். மீண்டுவந்த இந்த சந்தோசத்தை மீண்டும் விரட்டியடிக்க போகின்றோமா? வேண்டாம் வேதனைகளை விலை கொடுத்து வாங்குபவாகளாக நாங்கள் இருந்தது போதும். கடந்த காலங்களில் தவறுகள் பல ரூபங்களில் பற்ப்பலரால் நடத்தப்பட்டிருக்கலாம். அதற்க்கான பழிவாங்கலக்காகவோ அல்லது உணர்ச்சி ப+ர்வமான விடயங்களுக்காவோ உங்கள் வாக்குகளை தாரை வார்த்து எமக்கு கிடைக்க கூடிய பொன்னான வாய்ப்புக்களை தவறவிடவேண்டாம்.

எமது நியாயமான கோரிக்கைகள் விடுதலைப்புலிகளின் அநியாயமான போராட்ட வடிவத்தால் நியாயமற்று போனது. அதுவே எமது நீண்டகால வேதனை நிறைந்த வாழ்வுக்கு வழி வகுத்து கொடுத்தது இன்று புலிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களின் சில மிச்சங்கள் இன்னமும் வயிறு வளர்க்க காத்திருக்கின்றன. இத்தேர்தலில் பல கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களது அவலங்களை விட தங்களது சொந்த அபிலாசைகளே முதன்மையானது என்பதற்க்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். இந்த கட்சிகளின் கொள்கைகள் என்பது ஒன்று புலியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது. இதில் கூட பலவகைப்பட்டவர்கள்;; அவர்களில் முதன்மையானவர்கள் புலி ஆதரவு மக்களின் வாக்குகளை கொண்டு தங்கள் வயிறு வளர்ப்பவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழையையும் தேசியத்தையும் தங்கள் சொந்த நலனுக்காக கூவி கூவி விற்ப்பவர்கள். இவர்களுக்கு பொது மக்களைப்பற்றி எந்த கரிசனையும் கிடையாது. இல்லையென்றால் இறுதிக்கட்ட போரில் இதயங்கள் நொறுங்கி கொண்டிருந்த போது இதயத்தை கல்லாக்கி தங்கள் இருப்புக்காய் அடம் பிடித்திருப்பார்களா? மக்கள் அழிவதிலும் பார்க்க தங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் புலிகளை காக்க வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தவர்கள் அது நிறை வேறாமல் போகவே இன்று கூட்டமைப்பினர் பலர் அக்கட்சியுடனான தங்கள் உறவுகளை விவாகரத்து பண்ணி சிலர் மறுமணம் புரிந்தும் இன்னும் சிலர் தன்னிட்சையாகவும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் சம்பந்தருடான சம்மந்தம் மட்டும் தமிழ் தேசிய குழுவாக நிலைத்து நிற்க்கின்றது. மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இச்சம்மந்தமும் முறிந்து விடலாம். மேலும் மேலும் ஒற்றுமைப்பட வேண்டிய நேரத்தில் மேலும் மேலும் பிரிந்து செல்லும் இவர்களின் உள் நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டிய தேவை மக்களே! உங்கள் எதிர் கால நலம் கருதி அவசியமானது. மக்களுக்கு இது வேண்டும் இன்னமும் வேண்டும் என்று உங்களை உணர்ச்சி வயப்படுத்தி தங்களுக்கு எது வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். ஆகவே தமிழ் பேசும் மக்களே! நீங்கள் யாரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதை விட இவர்களை தோற்கடிக்க வேண்டியதே மிக முக்கியமானது.

மற்றையது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெயரில் என்னவோ ஜனநாயகம் உண்டு ஆனால் செயல்களில் அதை காட்ட மாட்டார்கள் புலிகளை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தார்கள் அதை மக்கள் நலம் கருதி என்று நினைத்தால் அது தவறாகி விடும். புலிகளை போல் நடந்து கொள்ள தங்களுக்கு வலிமை காணாதால் ஏற்ப்பட்ட ஆதங்கமே அதற்க்கான காரணம் என நம்பத்தோன்றும் அவர்களின் செயல் அப்படிப்பட்ட ஒன்றே. மொத்தத்தில் வலுவிழந்த புலிகள் வசதிக்கேற்ற வன்முறைகள். அமைச்சராய் பல காலம் அரசாங்கத்தின் பணத்தை மக்களுக்கு அள்ளிக்கொடுப்பதன் மூலம் அவர்களை வசப்படுத்தி அமைச்சர் பதவியை தன் வசப்படுத்தி வைப்பதே இக்கட்சியின் ஒரே தலைவருடைய குறைந்த பட்சமமும் அதிக பட்சமுமான ஒரேயொரு லட்சியம்.

தமிழ் பேசும் மக்களே! இவர்களால் உங்களுக்கு நிகழ்காலத்தில் சில நன்மைகள் கிட்டலாம் ஆனால் நீண்ட காலமாக புரையோடிக்கிடக்கும் எங்கள் பிரச்சனைக்கு எந்த தீர்வும் பெற்றுத்தர முடியாது. ஆகவே இவர்களை சம்பந்தர் குழுவைப்போல் தோற்க்கடிக்க வைப்பதை விட ஒற்றுமையின் அவசியத்தை புரிய வைக்க வேண்டிய தேவையே அதிகம் உள்ளது.

எல்லோரையும் ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது ஓரம் கட்டி விட்டு யாரைத்தான் தேர்ந்தெடுப்பது? எமது நீண்ட கால பிரச்சனை நீடித்திருப்பதற்க்கு காரணம் ஒற்றுமையின்மையே ஆகவே அதன் அவசியத்தை தெரிந்து வைத்திருப்பவர்கள், விரும்பி நிற்பவர்கள் யாரோ? அவர்களை ஆதரிப்பதே எமது பிரச்சனையின் நிரந்தர தீர்வுக்கான ஒரே வழி அப்படி நோக்கும் போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) சித்தார்த்தன் தலைமையிலான தமிழ்ஈழ விடுதலை கழகம் ஆகிய இரு கட்சிகள் ஒன்று சேர்ந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

இந்த இரு கட்சிகளும் புலிகள் இருந்த போதும் சரி அவர்கள் இல்லாத இன்றைய சூழ்நிலையிலும் சரி தங்கள் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்து கொண்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதற்க்காக தங்கள் சக்திக்கு மீறியதான பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் அரசியல் தெளிவு சூழ்நிலைக்கு ஏற்றவாறு யதார்த்தமாக முடிவெடுக்கும் திறன் இவைகளெல்லாம் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்வுக்கு பெரும் பங்களிப்பை வளங்கக்கூடியது.

அது மட்டுமல்லாது எமது அண்டைய நாடான இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எந்த தீர்வும் சாத்தியமில்லை என்று நாம் அனைவரும் உணர்ந்திருக்கும் இந்த வேளையில் அவருடைய இந்தியா மீதான தொடர்புகள் மிக முக்கியமான சாத்தியங்களை தோற்றுவிக்கும், மாகாண சபை காலத்தில் சிங்கள அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஒன்றிரண்டு விட்டுக்கொடுப்புகளுக்கு அவர் இணங்கியிருந்தால் ஒருவேளை அவர் இன்று வரை முதலமைச்சராக இருந்திருக்கலாம் ஆனால் அவர் தமிழ் பேசும் கிடைக்க வேண்டிய உரிமையில் மிகவும் உறுதியாக இருந்தபடியால்தான் புலிகளாலும் பிரேமதாசாவிலும் நாட்டை விட்டு துரத்தப்பட்டார். இப்படிப்பட்ட நேர்மையான உறுப்பினர்களை கொண்ட கட்சிகளை மக்கள் உதாசீனம் செய்தால் அது மீண்டும் எம்மை கடந்தகால கசப்பான வாழ்க்கைக்கே இட்டுச்செல்லும்.இது எதுவும் வேண்டாம் எங்கள் தமிழ் மக்களை கொன்றொழித்த சிங்களவர்களை பழி வாங்கியே தீருவோம், தமிழ்ஈழமே எங்களது முடிந்த முடிவு என்ற கற்ப்பனை வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு அதற்க்கு தூபம் போடுவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் எங்களை நாங்களே பழி வாங்கியவர்கள் ஆவோம்.

மாகாண சபை ஆட்;சியில் கிடைத்த சந்தர்ப்பத்தை போல , சந்திரிகா ஆட்சியில் கிடைத்த சந்தர்ப்பத்தை போல , ஒஸ்லோ தீர்மானத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை போல , மகிந்தாவின் யுத்ததிற்க்கு முன்பான ஆட்சியில் கிடைத்த சந்தர்ப்பத்தை போல நாம் இம்முறையும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடப்போகிறோமா? எமது எதிர்கால அமைதியான சந்தோசமான வாழ்வுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.

மோகன்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr