இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய எம்.பிகளிடம் இலங்கை உயர்தானிகர் மன்னிப்பு கோரினார்

JKR  வியாழன், 15 மார்ச், 2012


லங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டுமென கூறியமைக்காக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
'தமிழ்நாடு எம்.பிகளின் மனதில் அதிருப்திகள், கவலைகள், துன்பங்கள் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இதற்காக நான் வருந்துகிறேன்' என புதுடில்லியில் செய்தியளர்களிடம் அவர் தெரிவித்தார். 'தமிழ்நாடு எம்.பிகளின் மனதில் அதிருப்திகள், கவலைகள், துன்பங்கள் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இதற்காக நான் வருந்துகிறேன்' என புதுடில்லியில் செய்தியளர்களிடம் அவர் தெரிவித்தார். இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்த கருத்துதொடர்பாக விளக்கமளிக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அவருக்கு அழைப்பானை விடுத்திருந்தது. அதையடுத்து இந்திய வெளிவிகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்த பின்னரே உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவஸம் இவ்வாறு கூறியுள்ளார். தமிழர் விவகாரத்தில் அனுதாபமாகவுள்ள இந்திய எம்.பிகளிடம் புதுடில்லி விசாரணை நடத்த வேண்டுமென பிரசாத் காரியவசம் கூறியதாக இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டது. எனினும், 'நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. எல்.ரி.ரி.ஈ.யின் பிரசாரக்குழுக்கள் வெளிநாடுகளிலும் இப்பிராந்தியத்திலும் (இலங்கைக்கு எதிராக) தவறான தகவல்களையாக பரப்பி வருகின்றனர் என்பதையே நான் கூறினேன்' என அவர் தெரிவித்துள்ளார். இப்பிரசாரங்கள் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாகவுள்ளது எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தான் குறிப்பிட்டது வெளிநாடுகளிலுள்ள தமிழ் குழுக்களையே அன்றி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல எனவும் அவர் தெரிவித்தார். தான் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தனது கருத்துக்கள் குறித்த தமது கவலையை தெளிவாக வெளிப்படுத்தினர் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து இந்தியா என்ன நிலைப்பாடு மேற்கொள்ள வேண்டும் செய்தியாளர்கள் வினவியபோது 'இந்தியா பொறுப்புமிக்க நாடு' என எச்சரிக்கையுணர்வுடன் பிரசாத் காரியவசம் பதிலளித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr