இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாகிஸ்தானை வென்றது இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை

JKR  ஞாயிறு, 18 மார்ச், 2012


சிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் இந்திய அணி தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ளபோதிலும் அவ்வணிகள் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளன. மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நஸீர் ஜம்ஷெட் 104 பந்துகளில் 112 ஓட்டங்ளையும் மொஹமட் ஹாபீஸ் பந்துகளில் 113 ஓட்டங்களையும் பெற்றனர். இவ்விருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 224 ஓட்டங்களைக் குவித்தனர். இது ஆசிய கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களாகும். இந்திய பந்துவீச்சாளர்களில் அஷோக் டிண்டா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் பிரவீன் குமார் 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்தது வெற்றி இலக்கை அடைந்தது. வீரட் கோலி 148 பந்துகளில்ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 144 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது. இத்தொடரில் நாளை மறுதினம் இலங்கை –பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr