ஒரு அன்பு மடல்
உனக்கென் கைப்பட - நம்
நினைவுகள் சுமந்து...
ஓர் அறையில் நாமிருந்தோம்
உனக்கும் அது நினைவிருக்கும்
என் கற்பனையில் குதிரையோட
காலம் தாண்டி கவியுரைப்பேன்
கஷ்டப்பட்டு கேட்ட பின்பும் - நீ
கம்பன் பற்றி பேசச் சொல்வாய்
பேசிப் பேசிப் பொழுதும் வர
போர்வைக்குள்ளே ஒளிந்து கொள்வோம்...
இன்னும் ஒன்று நினைவில் உண்டு
அன்னமிட்ட கைகளுக்கு நீ
எப்போதும் அடிமையென்று...
சத்தியமாய்த் தெரியவில்லை
எப்படி அதை மறப்பதென்று...
சொல்ல ஒன்று மறந்து விட்டேன்
உன் கைப்பேசிக் கருவரை பற்றி
அற்புதமாய் அடித்துச் சொல்வாய்
அத்தனையும் தங்கை என்று...
ஒன்று மட்டும் சொல்கின்றேன்
உயிரான நண்பனுக்கு -
நீயிருந்த நாள்வரையில்
நிஜமாய் நான் கலங்கவில்லை
காதல் விட்டுப் போன போது
தேற்றிடத் தான் நீயிருந்தாய்
இன்று நீ விடுத்துப் போகின்றாய்
ஆற்றிடத் தான் யார் வருவார்...
என்றேனும் வந்துவிடு
உனக்காகக் காத்திருப்பேன்
நாமழிந்து போனாலும் - நம்
நட்பு மட்டும் வாழுமிங்கே...
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக