
குஷ்புவைத் தொடர்ந்து சினேகாவும் செருப்பு விவகாரத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்.திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற சினேகா காலில் செருப்பு அணிந்தபடியே மலையை வலம் வந்தார்.இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது இந்து மக்கள் கட்சி. சினேகாவின் வீட்டின் முன்போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்தனர். உடனே இந்த அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம்விளக்கம் அளித்தார் சினேகா.
சில வருடங்களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் செருப்பு அணியாமல்நடக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகவும் கோவிலுக்குச் செல்வதற்கென்றேதனியாக துணியால் செய்யப்பட்ட செருப்பை வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த விளக்கத்தைஅர்ஜுன் சம்பத் ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார் சினேகா.
ஆனால் போராட்டங்கள் நின்றபாடில்லை. நேற்று கூட வேலூரில் கூடிய அகில பாரத அனுமன்சேனா அமைப்பினார் சினேகாவின் படத்திற்குச் செருப்பு மாலை அணிவித்துத் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர். எங்கு திரும்பினாலும் பிரச்சினை வந்து சேர்கிறதே என்ற பெருத்த அதிர்ச்சியில்தடுமாறிப்போய் நிற்கிறார் சினேகா.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக