இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ராதா படைப் பிரிவைச் சேர்ந்த போராளி ஓமந்தை காட்டில் குறிசூட்டுத் துப்பாக்கியுடன் கைது

JKR  வெள்ளி, 25 செப்டம்பர், 2009


விடுதலைப் புலிகளின் ராதா படைப்பிரிவின் போராளி ஒருவரை தாம் காட்டுப்பகுதியில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதி நவீன குறிசூட்டுத் துப்பாக்கியுடன் இவர் கைதுசெய்யப்பட்டதாக மேலும் காவல்துறையினர் தெரிவித்தனர். பளையில் இருந்து காட்டுப்பகுதியூடாக கிளிநொச்சி வந்து பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதியூடாக பிறிதொரு இடம் செல்ல முயன்றவேளை ஓமந்தைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இவரை தாம் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் படங்களை வெளியிட்டுள்ள காவல் துறையினர், இவர் பெயர் விபரங்களை கூற மறுத்துவிட்டனர். புலிகள் முற்றாக அழிக்கப்பட்டும், முடக்கப்பட்டும் உள்ளனர் என கடந்த மே மாதம் முதல் கூறிவரும் இலங்கை அரசு, புலிகளின் சில அணிகள் இன்னமும் காட்டுப்பகுதில் செயற்படுவதை ஏற்க மறுக்கிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr