சவூதி அரேபியாவில் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய தமிழ் இளைஞரொருவர் சிறிலங்காவில் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் தெவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புனித ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் பிரசாத் (30) என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உமைகள் ஆணைக்குழுவிடம் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்டு 17 ஆம் திகதி காலை 8.20 மணிக்கு இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதனை விமான நிலைய தகவல் பிவினரும் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் தனது இருப்பிடத்துக்கு திரும்பாததனையடுத்தே அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 071 4872275 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கடத்தல்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களும், தமிழ் ஓட்டுக்குழுக்களும் முக்கிய பங்காற்றுவவதாக தெரியவருகின்றது. கட்டுநாயக்காவில் இருந்து வெளிநாடு செல்பவர்களும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வருபவர்களும் இவர்களது கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இளைஞர் மட்டுமல்ல மேலும் சிலர் விமான நிலையத்தில் இறங்கியதன் பின்னர் காணாமல் போயுள்ளதாக கொழும்புச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக