இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு ஐநா உதவி

JKR  புதன், 30 செப்டம்பர், 2009


வடபகுதியில் கண்ணிவெடி அப்புறப்படுத்தும் பணிகளுக்கு 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் அந்தோனியோ கெட்டஸுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும், ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது.

ஜெனீவாவில் நடைபெறும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr