இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸில் சேர்ந்தார் ரோஜா

JKR  வியாழன், 10 செப்டம்பர், 2009


ஹைதராபாத்: ராசியில்லாதவர் என்ற பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் நடிகை ரோஜா.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, நேற்று செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா, சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி தொகுதிகளில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோற்றார்.சொந்தக் கட்சியினரே தன்னைத் தோற்கடித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டரா.ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்கிரசில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில், ராசியில்லாத அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஆந்திர காங்கதிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதற்குமேல் சும்மா இருந்தால், 'ஜோலியை முடித்துவிடுவார்கள்' என பயந்த ரோஜா, நேற்று ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்ந்தார்.பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி காங்கிரஸ் கட்சிதான் எனக்கு எல்லாமும். அந்தக் கட்சிக்காக உழைப்பேன்!" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr