இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வலைப்பூ என்னும் கடலில் கவிதை

JKR  ஞாயிறு, 27 செப்டம்பர், 2009







வலைப்பூ என்னும் கடலில் கவிதை தேடி முக்குளித்த பொது கவிஞரே வந்து கை குலிக்கிக் கொண்டான் face book முலம் அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் அனுமதியுடன் புடம் போட்டு தருகின்றேன் தனி பதிவாக இடுகின்றேன்
கடல் தன் அலைகளைக் கொஞ்சம் நிறுத்தி
வானமெங்கும் விரவிக் கிடக்கிற உன் வட்ட
முகத்தைத் தன்னில் விரிக்கிறது............
மழை தன் தூறலுக்குப் பல வண்ணங்களை அடித்துத்
தன்னை மறந்து கிடந்த மாலைப் பொழுதொன்றில்..........
எனைப் பார்த்து வழக்கமாய்த்தான்
இமைத்திருக்...கும் உன் விழிகள்.............
என்னுலகில் மட்டும் ஏனடி இத்தனை திருவிழாக்கள்???
நீண்ட இரவுகளில் இதழ் மூடிக் குவிந்த மொட்டுக்கள் காலையில் நீ எழுந்து நடக்கையில் மலர்ந்து சிரிப்பதை நான் பார்த்தேன்...........முன்னிரவில் வெள்ளொளி பரப்பிக் கிடந்த முழுநிலவின் விளிம்புகள் உனைக் கண்டதும் வெட்கத்தில் ஒரு முகிலுக்குள் ஓடி றைந்தன..........
உன்விழி பார்த்த கணங்களில் வழிமாறிய
நதியொன்று என் வாசலில் வழிந்தோட.............

பின்னர் வருகிற பொழுதொன்றில் உன் இதழ்
பற்றும் கனவுகளில் துள்ளிக் குதித்து உடைந்தன
என் வீட்டுத் தேநீர்க் கோப்பைகள்..........

உன் நினைவுகளை ஏந்தியபடி மெல்ல
உதிக்கிறது எனக்கான உலகம்.................

முன்னொரு நாளில் நான் இறந்ததை
எண்ணியபடி மண்ணுக்குள் புதைந்திருந்தேன்....
மௌனத்தை அடைகாத்துக் கல்லறையின்
இருட்டறையில் கடைசியாய் நான் தள்ளப்பட்டேன்....
fgfdh
நன்றி கவிதை தந்த நண்பனுக்கு ;அறிவழகன் கைவல்யன்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr