அமெரிக்காவின் கூட்டாளிகளாக செயல்படும் ஐரோப்பிய நாடுகள் உடனடியாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதியும், அல் - காய்தா இயக்கத்தின் தலைவனுமான ஒசாமா பின்லேடன் எச்சரிக்கை விடுத்துள்ளான்.
ஜிகாதி இணையதள அமைப்பு மூலமாக பின்லேடன் பேசியுள்ளதாக கூறி வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாவில், மேற்கண்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கூட்டாளிகளாக உள்ள ஐரோப்பிய நாடுகள்,அந்நாட்டுடனான நட்பை முறித்துக்கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படைகளை திரும்ப பெற வேண்டும்.
ஒரு புத்திசாலி நாடு தனது மைந்தர்களும்,பணமும் அமெரிக்கா கிரிமினல்களுக்காக வீணாவதை விரும்பாது.
மனித உயிர்களுக்கு மதிப்பளிகாத,விமானத்திலிருந்து உலக நாடுகளின் பல கிராமங்கள் மீது குண்டு வீசிய ஒரு நாட்டின் தலைமையின் கீழ் செயல்படுவது இந்த ( ஐரோப்பிய ) நாடுகளுக்கு வெட்கக்கேடானது.
லண்டனிலும், மேட்ரிட்டிலும் ( அல் - காய்தாவினரால் ) நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் கூட்டாளி நாடுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்றும் அந்த ஒலி நாடாவில் ஒசாமா பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக