சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமான மம்தா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். அவரது உயரத்தையும், ஒல்லியையும் அவ்வளவாக ரசிக்கவில்லை தமிழன். ஆனால் ஆந்திரா ஆவக்காவையும், கடப்பா காரத்தையும் அவரது அழகிலும், நடிப்பிலும் கண்டு கிறங்கி போயிருக்கிறார்கள் தெலுங்கு ரசிகர்கள்.
இந்த நிலையில்தான் நாகார்ஜுனாவை வைத்து பயணம் என்ற படத்தை துவங்கியிருக்கிறார் ராதாமோகன். பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் இப்படத்தில் முதன் முறையாக தனது ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறியிருக்கிறாராம் இந்த அமைதிப்பட இயக்குனர். அபியும் நானும் படத்திற்கு பிறகு ஆக்ஷன் படம்தான் என்று கூறிவந்த ராதா, தனது பாணியிலேயே வித்தியாசமான ஆக்ஷன் கதையை உருவாக்கியிருக்கிறார். இதில் ஆந்திராவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிக்கதான் மம்தாவை அழைத்தார்களாம். முதலில் கதையை சொல்லிடுங்க. பிடிச்சிருந்தா நடிக்கிறேன் என்று மம்தா சொல்ல, ஆரம்பமே மூட் அவுட்டா இருக்கே என்ற எரிச்சலில் புதுமுகத்தை நடிக்க வைக்கலாமா என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ராதாமோகன்.
அறிமுகமான படம் சிவப்பதிகாரமா இருக்கலாம். அதுக்காக ‘அதிகாரமா’ பேசலாமோ?
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக