
சி.ஐ.டி யினர் எனத் தம்மை அறிமுகப்படுத்தி கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வரை குருநாகலை சிறப்பு பொலிஸ் பிரிவு இன்று (10) கைது செய்துள்ளது. இவர்கள் 1.2 மில்லியன் ரூபா பணம், நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்ததோடு, இருவரைக் கொலைசெய்துள்ளதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் குருநாகலை, வெல்லாவ, கம்பகா மற்றும் கேகாலையைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிசார் கூறினர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்து மரலுவேவ என்ற இடத்தில் வசித்து வந்த சுனில் பிரேமரட்ண என்ற நபர் ஒருவர் குருநாகலையில் வைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், ஹர்ஷ லங்காகித் என்ற ஆங்கில ஆசிரியர் கொலையிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த இரு கொலைகள் நடைபெற்றதன் காரணங்கள் பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிரில் பெரேரா, மேற்படி கொலை நடந்த இரு இடங்களுக்கும் இவர்கள் சி.ஐ.டி போல உட்சென்றுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் கொள்ளையடிப்பதற்காகவா அல்லது யாருடையதேனும் தூண்டுதலில் இக்கொலைகள் நடந்தனவா என விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக