பெண்ணின் மனது பெரிய கடல்
பெண்ணின் மனது பெரிய கடல்
ஆணின் மனதோ சிறிய தீவு
கடலலைகள் எப்போதும்
தீவினை அணைத்துக்கொண்டிருக்கும்
ஆனால் அது அணைப்பு அல்ல
அந்த அலைகள் அணைப்பது போல்
நடித்துக்கொண்டிருக்கின்றன.
என்றோ ஒரு நாள் கடல் பெருக்கெடுக்கும்
அன்று அந்த அலைகள்
அந்த தீவினை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
அப்படி தான் பெண்.
நன்றாகா பேசுவாள்
இனிக்க இனிக்க கதை சொல்வாள்.
இனிமையாக சிரிப்பாள்.
இளைமையின் உணர்ச்சிகளை தூண்டுவாள்
இயல்பான வாழ்க்கையை கெடுப்பாள்
அவள் இல்லாவிட்டால் வெறுமை என உணரவைப்பாள்
வேளை தவறாமல் உன்னிடம் வருவாள்
அழகாய் இருப்பாள்
அணையா விளக்காய் இருப்பேன்
ஒளிதருவேன்
ஒற்றுமையாய் இருப்பேன்.
நீ சொல்வதே வேதவாக்கு
சொல்வதை செய்வேன்
எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பேன்.
நான் வேறு நீ வேறு அல்ல
என கதைவசனம் சொல்வாள்
புதுமை பெண்ணாய் நானிருப்பேன்
பூமியாய் உன்னை தாங்கிடுவேன் என
புதுமையாக பேசுவாள்
பூரிப்பாய் இருக்கும்
ஆனால்
இப்படி இருப்பவள்
கடைசியில் ஒரு நாள்
பூகம்பம் போல்
சட்டென
காலை வாரிவிடுவாள்.
குழியினுள் விழுந்தவன்
அன்று தொட்டு
குற்றுயிரும் குலையுயிரும் தான்.
இப்படியும் நடக்கும்
அலையின் தாக்கத்தால்
தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக
குட்டி தீவு மூழ்கி கொண்டிருக்கும்
கடைசியில் ஒரு நாள்
முற்றாகா அது அழிந்துவிடும்.
ஆனால் அலைகள் தொடர்ந்து
அடுத்த தீவை நோக்கியோ
தரையை நோக்கியோ
நகர்ந்து கொண்டிருக்கும்.
அப்படி தான் இதுவும்
ஒரு பெண்ணின் தாக்கத்தால்
ஒரு ஆண் குடி மகன் ஆகிறான்
அன்று தொட்டு அவன்
கொஞ்சம் கொஞ்சமாக
குடியால், புகையால்
தவறான பழக்கவழக்கங்களால்
அழியத்தொடங்குகிறான்
கடைசியில் ஒரு நாள்
இவனும் அழிந்து போகிறான்
ஆனால் பெண்
மீண்டும் ஒரு ஆணை நோக்கி
தன் பார்வைகளை திருப்புகிறாள்
அதனை பார்த்து அவன் மயங்க
அன்று தொடங்கிகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக