வடமாகாண முஸ்லிம்களின் அபிவிருத்தி அவர்களது மீள்குடியேற்றத்தில் தங்கியுள்ளது. அதற்கான முயற்சிகளை அரசியல் தலைமைகள் எடுக்கும்போது மக்கள் ஒற்றுமையுடன் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் தில்லையடி அல்-ஜித்தா மீள்குடியேற்ற கிராமத்திற்கான தொழில் பயிற்சி நிலையம், மற்றும் அல்-ஜித்தா பள்ளி வாசலுக்கான தண்ணீர் விநியொகம் என்பனவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (2009.09.25)இடம்பெற்றது. அதில கலந்து கொண்டு உரையாற்றும போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பள்ளி பரிபாலன சபைத் தலைவர்.எம்.முஹைமின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“அன்று நான் எடுத்த முடிவின் காரணமாக வடமாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் பல நன்மைகளை பெறக் கூடியதாகவுள்ளது. பிழையான வழியில் ஒருவர் பயணிக்கின்றார் என்று தெரிந்து கொண்டு அவரது பின்னால் செல்வதானது தம்மைத் தாமே அழிவுக்கு இட்டுச் செல்லும் காரியமாகும்.
இன்றைய சூழலில், எமது மக்களின் மீள்குடியேற்றம் குறித்து தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமது பிரதேசங்களுக்கு மக்கள் செல்லும்போது அவர்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
வடக்கில் பயங்கரவாதத்தின் பின்னர் எத்தனையோ அபிவிருத்திகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வட மாகாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் இழந்தவற்றுக்கு நியாயமான நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தேவை எமக்குள்ளது.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் இரண்டுவிதமாக கருத்துக்கள் இருக்க முடியாது.
தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று கூறி வந்த அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள், இன்று மக்களது மீள்குடியேற்றம் குறித்து மட்டுமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
எமது சகோதர தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களில் மீள்குடியேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இவர்கள் இந்த முகாம்களில் தற்காலிகமாகவே குடியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.
இன்று நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருப்பதற்கு உதவி செய்தவர்களில் இப்பகுதியைச் சேர்ந்த மர்ஹூம்களான அன்சாரி, ஆப்தீன் ஆகியோரை மறக்க முடியாது. அவர்களின் தியாகமே இன்று இந்த மீள்குடியேற்றக் கிராமம் அபிவிருத்தி அடைவதற்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சர் 18 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் எம்.அமீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் டபிள்யூ.எஹியான், பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன், கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், யாழ். மநாகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பக்கீர் நெய்னா மஹம்மத் பாவாவின் பாடல் இசையும் இடம்பெற்றது
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக