மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் உயிலங்குளம் பிரதேச சதுப்பு நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மூன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை எலும்புக்கூடுகள் காணப்பட்ட .இடத்திலிருந்து ஆயுதங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க அவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் சந்தியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உயிலங்குளம் விடத்தல்தீவு பிரதான வீதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்கள் அந்த வீதியின் இடதுபுறமாக அமைந்தள்ள சதுப்பு நிலத்தில் மனித எழும்புகளை ஒத்த எழும்புக்கூடுகள் சில காணப்படுவதை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் எழுந்த சந்தேகத்தையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் அந்நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மூன்று மனித எழும்புக்கூடுகளை மீட்டனர்.
அத்துடன் அந்த எழும்புக்கூடுகளுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த ரீ56 ரக துப்பாக்கிகள் 02, மகசின்கள் 03, 40 துப்பாக்கி ரவைகள் அடங்கிய பூஷஸ்கள் 02, கா.வி.பு 00294 எனும் இலக்கத்தகடொன்று, பழுதடைந்த நிலையிலான சீருடைகள் 02, டோர்ச் லைட்டுகள் 02 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாயுத உபகரணங்கள் மீட்கப்பட்டதை அடுத்து குறித்த எழும்புக்கூடுகளுக்குச் சொந்தமானவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மன்னால் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக