இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு குச்னர் மிலிபான்ட் விருப்பம்- அமைச்சர் போகொல்லாகமவுடனும் பேச்சு

JKR  ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகிய இருவரும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை அவதானிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் வைத்து வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகமவிடம் இந்த முடிவை அவர்கள் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் பிரான்ஸ், பிரிட்டிஷ் வெளிநாட்டøமச்சர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அமைச்சர் போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர்கள் குச்னர், மிலிபான்ட் ஆகியோர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மூன்று அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராமங்களின் நிலைமை, முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் வேறு இரகசிய நிலையங்களில் வைக்கப்படுகிறார்களா என்பது உட்பட மீள் குடியேற்ற முயற்சிகள் ஆகியன குறித்து இலங்கை தரப்பிடமிருந்து பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் விபரங்களைக் கோரினார்கள். இது சம்பந்தமாக ஆரம்பத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லை, மீள குடியேற்றப்படும் மக்கள் தொகை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, எவ்வõறாயினும் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்கு போதிய உபகரணங்களும் பயிற்றப்பட்ட ஊழியர்களும் கிடைப்பதில் மீள் குடியேற்றம் தங்கியுள்ளது என்று கூறினார். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இந்த விடயத்தில் உதவி வருவதாக தெரிவித்த அமைச்சர் ஏனையோரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களை நலன்புரி கிராமங்களில் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், மீள் குடியமர்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் கூறினார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்துவதற்கென ஏற்கனவே ஒரு தொகுதி மக்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr