இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கோலிவுட்டை நாடும் டோலிவுட் ஹீரோக்கள்!

JKR  திங்கள், 9 நவம்பர், 2009

இங்குள்ள நடிகைகள் ஹைதராபாத் பக்கம் பறக்க எப்போது வாய்ப்பு வரும் என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அக்கட தேசத்து ஹீரோக்களோ கோலிவுட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் தொடர்ச்சியான ஹிட் கொடுத்து ஸ்டார் அந்தஸ்தை எட்டியுள்ளவர் ரவிதேஜாதான். அவரது சமீபத்திய சூப்பர் ஹிட்டான 'கிக்' படம்தான் ஜெயம் ரவி நடித்துவரும் தில்லாலங்கிடி.

இப்போது 'நாடோடிகள்' படத்தின் தெலுங்குப் பதிப்பான 'சம்போ சிவசம்போ'வில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தெலுங்குப் பதிப்பையும் சமுத்திரகனிதான் இயக்குகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரின் திறமையையும் வேலைத் திறனையும் பார்த்து வியந்த ரவிதேஜா, சமுத்திரகனியின் இயக்கத்தில் நேரடித் தமிழ் படமொன்றில் நடிக்கும் தனது ஆசையைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நன்கு பேசத் தெரிந்த நடிகர் ரவிதேஜா. எனவே சமுத்திரகனியின் அடுத்த தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகனாக, சொந்தக் குரலில் பேசி நடிக்க இப்போதே கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

தமிழுக்கு வரத் துடிக்கும் இன்னொரு ஹீரோ ராம் சரண் தேஜா. சிரஞ்சீவியின் மகன். இவரது மகா தீரா தெலுங்குப் படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது ஆந்திராவில். அந்தப் படத்தை அப்படியே மொழிமாற்றம் செய்து வெள்ளோட்டம் விடப்போகிறார்களாம் பொங்கலுக்கு. பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் நேரடி தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கிறாராம் ராம் சரண் தேஜா.

தமிழில் ஏற்கெனவே முயற்சித்து மூக்குடைபட்ட உதய் கிரண், இப்போது கருணாநிதி கதை வசனம் எழுதும் பெண் சிங்கம் படத்தில் 'ஆண் சிங்கமாக' வருகிறாராம்.

நாகார்ஜூனா மகன் சைதன்யாவும் தமிழ் ப் படத்தில் நடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இப்போதைய நிலவரப்படி இந்தப் பட்டியலில் இன்னும் சில ஹீரோக்கள் சேரக்கூடும் என்று தெரிகிறது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr