இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஸ்ரீ.ல.சு.க. மாநாட்டில் ஆறு ஆண்டுக் கொள்கை அறிக்கை வெளியீடு

JKR  திங்கள், 9 நவம்பர், 2009


கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படும்.

தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் மாநாட்டில் வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

"சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம்" எனும் தொனிப் பொருளிலேயே இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படவிருப்பதாக மேல் மாகாண ஆளுநரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலான தெரிவித்தார்.

தேசிய மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். மூன்று மணியளவில் ஆரம்பமாகவிருக்கும் இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள், சு.க. அமைப்பாளர்கள், ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவர்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்துக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.

சு.கவின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr