இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அலாதீனிஸ் இலங்கை அழகி

JKR  திங்கள், 9 நவம்பர், 2009


பாலிவுட்டில் இப்போது நடிகைகளுக்கு பஞ்சம் காலம் போலும்! தெனனிந்திய நடிகைகளான அசின், ஜெனீலியா, த்ரிஷா ஆகியோருக்கு பிறகு அந்த வரிசையில் இப்போது 2006-ம் ஆண்டு மிஸ் இலங்கை பட்டம் பெற்ற ஜாக்குலின் பெர்ணாண்டஸம் இணைந்துள்ளார்.இதுவரை ஹிந்தி படங்களை பார்த்திராத ஜாக்குலினுக்கு “அலாதீன்’ ஹிந்திப் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு, அதில் நடிக்கும் நடிகர்கள் அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் என்றதும் உதறலும் எடுத்து விட்டதாம் ஜாக்குலினுக்கு!”அமிதாப்புடன் நடித்திருக்கும் இந்தப் படம் தனது வாழ்நாளில் நடந்த மிக நல்ல விஷயம்’ என்று கூறும் ஜாக்குலின் தற்போது ஹிந்திப் படங்களை பார்ப்பதையே பொழுதுபோக்காக்கியுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த “தேவதாஸ்’ இவரை மிகவும் கவர்ந்த படமாம்.புகழ் பெற்ற “அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கதைதான் புதிய அவதாரத்தில் வரும் “அலாதீன்’. இதில் ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் ஜாக்குலின் நடிக்கிறார்.படம் தொடங்குவதற்கு முன்னால் மொழி, நடிப்பு மற்றும் நடன பயிற்சி எடுத்துக் கொண்ட ஜாக்குலினின் தாய் மொழி ஆங்கிலமாக இருந்தாலும் முதல் முறையாக நடிக்கும் இந்த ஹிந்திப் படத்தில் அவரே பின்னணி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பலர் பலவிதமாக எச்சரித்து தனக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் ஒரு சவாலாக ஏற்று இன்று தனது கடின உழைப்பால் இவ்வளவு தூரம் வந்திருப்பது தனக்கு உத்வேகம் அளிப்பதாக கூறுகிறார் ஜாக்குலின்.விளம்பரத்திலும் ஜோடி சேரும் அபிஷேக் -ஐஸ்!சினிமாவில் ஜோடி சேர்ந்து நடித்து, வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்துள்ள அபிஷேக் பச்சன் -ஐஸ்வர்யா ராய் இப்போது ஒரு சோப் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரப் படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர். இதற்காக அந்த நிறுவனத்திடம் இந்த தம்பதியர் பெற இருக்கும் சம்பளம் 25 கோடி ரூபாயாம்! இந்த விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் இல்லையாம்; ஏதோ ஒரு வெளிநாட்டில்தானாம்!ஆனால் அந்த விளம்பரத்தை நம்ம ஊரு டி.வி. சேனல்களில்தானே போடுவார்கள்.அப்படியென்றால் அந்த சோப்பின் விலை எவ்வளவு இருக்குமாம்? பொறுத்திருந்து பார்ப்போம்.ஹிந்திப் படங்களை மிஞ்சும் லடாக்கி மொழி படங்கள்!இந்திய படம் என்றால் வெளிநாட்டவருக்கு ஹிந்திப் படங்கள்தான் நினைவுக்கு வரும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து திரையரங்குகளில் கல்லாவை நிரப்பும் நிலையில் உள்ள பாலிவுட் படங்களுக்கு இப்போது சவால் விடுகிறது லடாக்கி மொழி படங்கள்.ஜம்மு காஷ்மீர் என்றால் நமக்கு ஞாபகம் வருவது அங்குள்ள இயற்கை அழகும், தீவிரவாதமும்தான். ஆனால் அந்த மாநிலத்தில் அதிகம் பேசப்படாமல், உலகுக்கு ஏன் அதிகம் இந்தியர்களுக்கே பரிச்சயம் இல்லாத இடம் லடாக்.ஹிந்திப் படங்களாலும், பிற மொழி படங்களாலும் தங்கள் மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் சீரழிந்துபோவதாக கருதிய லடாக் மக்கள் தங்களுக்கென்றே தங்கள் லடாக்கி மொழியில் படம் எடுக்க தொடங்கியுள்ளனர். இந்தப் படங்களில் அரசு அலுவலர்கள், புத்த மத தலைவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், உள்ளூர் காவல்துறையை சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்களுள் அதிகம் சம்பளம் பெறும் நடிகையின் சம்பளம் வெறும் 50,000 ரூபாய்தான்! அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரை “லாஸ் டெல்’ படத்தில் நடித்த ஸ்டன்சின் நம்டால் தட்டி செல்கிறார்.இந்த அமைதி புரட்சிக்கு பின்னால் இருப்பது “லடாக் விஷன் குரூப்’ என்ற அமைப்புதான். லடாக்கி பாரம்பரியத்தை காப்பது, அந்நிய கலாச்சார பாதிப்பால் லடாக்கி இளைஞர்கள் சீரழிவதை தடுப்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்று இதன் நிறுவனரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான டார்டே காணாங் கூறுகிறார்.இப்படி உருவாகும் லடாக்கி படங்களை முதலில் மக்கள் நிறைந்த ஒரு அரங்கில் திரையிடப்படும். பின்னர் ஒவ்வொரு கிராமமாக எடுத்துச் சென்று எல்.சி.டி. புரொஜக்டர் மூலம் உள்ளூர் மக்களுக்கு காண்பித்து பணம் வசூலிக்கின்றனர்.புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி படம் எடுத்து வரும் இவர்கள் “லாஸ் டெல்’ படத்துக்காக 30 அடி உயர கிரேனை முதன் முதலாக பயன்படுத்தியுள்ளனர். இந்த கிரேன் பன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது என்கிறார் இப்படத்தின் இயக்குனரான தஷ் தவா. இந்த குழுவின் முயற்சியால் இப்போது லடாக்கிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் டாக்ஸிகளில் லடாக்கி பாடல்கள்தான் ஒலிக்கிறதாம். ஹிந்தி மற்றும் ஆங்கில பாடல்களுக்கு அவர்கள் விடை கொடுத்து விட்டார்களாம். “லடாக்கில் குடும்ப பந்தம் உறுதியாக இருப்பதால் சினிமா பார்ப்பதும் ஒரு குடும்ப சடங்காகவே இருக்கிறது. அதனால் வேகம் நிறைந்த திரைக்கதையும், கலாசாரத்திற்கு ஒவ்வாத கதைகளுக்கு பதில் பாரம்பரியத்தை பேணும் லடாக்கி மொழி படங்களை அங்குள்ள மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்’ என்று லடாக்கி திரை உலகம் பற்றிய டாகுமெண்டரி படம் “அவுட் ஆப் தின் ஏர்’ படத்தை இயக்கிய ஷபானி ஹசன்வாலியா கூறுகிறார். இப்போது பாலிவுட் படங்களுக்கு இன்னொரு இந்திய மொழி படங்களால் சவால் ஏற்பட்டிருக்கிறது.விரதம் இருக்கும் பாலிவுட் கதாநாயகிகள்!“கர்வா சாவத்’ என்பது காலம் காலமாக வட இந்திய திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்கு கடவுளை வேண்டி ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து பிரார்த்தனை செய்யும் தினம். அதாவது நம்ம ஊரு வரலட்சுமி விரதம் போன்றது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.காலையில் நோன்பு தொடங்கும் இவர்கள் நிலவு வந்தபின் தங்கள் விரதத்தை கணவருக்கு முன் முடிப்பதே இந்நாளின் சிறப்பம்சம். பல ஹிந்திப் படங்களில் இதை காட்சியாக வைத்து, கணவன் மீது மனைவிக்குள்ள பதி பக்தியை விளக்குவர் பாலிவுட் இயக்குனர்கள்.பாலிவுட் பிரபலங்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதும் அதை பத்திரிகைகள் ஒரு செய்தியாக வெளியிடுவதும் தற்போது வாடிக்கையாகி விட்டது. மணமானவர்கள் மட்டும் இல்லாமல் காதலிகளும், திருமணம் நிச்சயம் ஆனவர்களும் கூட இந்த வருடம் விரதம் இருந்துள்ளனர்.இந்த விரதத்தை வருடா வருடம் கடை பிடிக்கும் தன் மனைவி டிவிங்கிள் கண்ணாவுக்கு துணையாக தானும் விரதம் இருந்தார் அக்ஷய் கண்ணா. கஜோல் தேவ்கன்னோ தனது மாமியார் மற்றும் நாத்தனாருடன் இந்த வருடமும் விரதத்தை மேற்கொண்டார். பல தடவை வேண்டாம் என்று சொல்லியும் கஜோல் தன்னை விடுவதாக இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.சுனில் ஷெட்டியின் மனைவி மனா ஷெட்டியோ, தான் விரதம் முடிக்கும்பொழுது தன் கணவர் படப்பிடிப்பை முடித்து விட்டு தன் அருகில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுவாராம்.இந்த முறை படப்பிடிப்பில் இருந்ததால் விரதம் கடைபிடிக்க முடியாமல் போனதாகவும் அடுத்த விரதம் 7 வருடம் கழித்துதான் என்றும் இப்போதே அறிவித்து விட்டார் கரீனா கபூர்.நம்ம ஊரு ஸ்ரீதேவி தன் குடும்பத்துடனும், சஞ்சய் தத்தின் மனைவி சென்ற வருடம் போல் மிக விமரிசையாக இல்லாமல் எளிமையான முறையிலேயே விரதத்தை கடை பிடித்துள்ளனர்.எவ்வளவு காலமாற்றம் ஏற்பட்டாலும் பாலிவுட் நடிகைகள் இந்த “கர்வா சாவத்’ விரதத்தை கடை பிடித்து வருவது பெருமைக்குரிய விஷயம்தானே?

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr