இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாளை இந்தியா-தென்னாபிரிக்கா 2ஆவது ஒருநாள் போட்டி

JKR  செவ்வாய், 23 பிப்ரவரி, 2010


இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை குவாலியரில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2ஆவது ஒருநாள் போட்டி நாளை குவாலியரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் நேற்று குவாலியர் வந்தடைந்தனர்.

நேற்றைய தினம் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டனர். எனினும் இன்று இரு அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்கள் காலையில் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர். தென்னாபிரிக்க வீரர்கள் நண்பகலுக்கு மேல் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதல் போட்டியில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இந்தியா, இந்த போட்டியிலும் வெற்றி பெற உறுதியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா தொடரைக் கைப்பற்றி விடும்.

எனவே, சிறப்பாக விளையாட இந்திய வீரர்கள் உத்வேகத்தோடு உள்ளனர். அதேநேரத்தில் தென்னாபிரிக்க அணி, தொடரை இழக்க விரும்பாததால் நாளைய போட்டியில் வெற்றிக்காகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr