இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அம்பாந்தோட்டை, கம்பஹா மாவட்டங்களில் ஐ.ம.சு.மு இன்று வேட்பு மனு தாக்கல்

JKR  திங்கள், 22 பிப்ரவரி, 2010


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று கையளிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

"நாட்டிலுள்ள சகல மாவட்டங்களுக்கும் நாளையும் நாளை மறுதினமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் சகல வேட்பாளர் மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.

18 மாவட்டங்களில் வேட்பாளர் மனுக்கள் ஏற்கனவே கைச்சாத்தாகியுள்ளன. ஏனையவை இப்போது கைச்சாத்தாகி வருகின்றன.நாட்டில் தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொள்ளும் வகையில் சகல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொது மக்கள் நாட்டுக்குத் தேவையான் சரியான தீர்ப்பை வழங்குவர்" என்றும் அமைச்சர் கூறினார். ___

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr