இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத் பொன்சேகா சிறையில் சுகபோகம் அனுபவிக்கவில்லை : அனோமா

JKR  செவ்வாய், 23 பிப்ரவரி, 2010


தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா சிறையில் சுகபோக வாழ்வை அனுபவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரது மனைவி அனோமா பொன்சேகா, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா சுகபோகமாக வாழ்க்கை நடத்துவதாகவும் அவருக்கு உயரிய உபசரணை வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

எனினும் இவற்றை முற்றாக நிராகரித்த அனோமா பொன்சேகா, தமது கணவரின் உடல் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சிறையில் அதிக வெப்பநிலை மற்றும் ஒவ்வாத தன்மைகளினால் அவரது சுகாதார நிலைமைகளும் நாளுக்கு நாள் மோசமடைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் பாரிய அளவில் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், அரசாங்கமே இவ்வாறான போலியான வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr