இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முன்னாள் பா.உ. கஜேந்திரனை மிரட்டி தடுத்து வைத்திருந்த இராணுவத்தினர்

JKR  புதன், 24 பிப்ரவரி, 2010


இன்று மாலை 7.30 மணியளவில் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வீதி அருகில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் உரையாடிக் கொண்டிருந்த செல்வராஜா கஜேந்திரனை இராணுவத்தினர் மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
திடீரென அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் அனைவரின் தேசிய அடையாள அட்டையை பறித்து வைத்திருந்ததாகவும், பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை அவ்விடத்திலேயே நிற்க வைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, 'நாட்டைக்காக்கும் தமிழர் பாதுகாப்பு முன்னணி" எனப்படும் அமைப்பு கஜேந்திரனையும் அவரது சகோதரரையும் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கடந்த மாதம் அச்சுறுத்தல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr