இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜே.வி.பி. தவறான வழியில் செல்கிறது: அமைச்சர் நந்தன குணதிலக்க

JKR  திங்கள், 22 பிப்ரவரி, 2010


மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தனது கொள்கையை விடுத்து தவறான வழியில் செல்வதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் நந்தன குணதிலக்க, தன்னைப்போல தனது ஆதரவாளர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டும் என களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

"என்னில் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனது அரசியல் பயணத்தில் நான் தெளிவாக உள்ளேன்.

நாட்டுக்காக கொள்கைகளை முன்வைக்கும் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி விளங்கியது. எனினும் தற்போது அதனை காண முடிவதில்லை" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

1989ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்துகொண்ட நந்தன குணதிலக்க கடந்த வருடம் தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்தார். அங்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr