இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அகதி முகாமைச் சேர்ந்த பெண் தற்கொலை-போலீஸார் மீது புகார்

JKR  செவ்வாய், 9 மார்ச், 2010




கரூர்: கரூர் அருகே உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை 3  போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற  சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்ததது.

இந்நிலையில் கரூர் எஸ்பியாக வந்த டாக்டர் தினகரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த குமார்,  பாண்டி, பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மார்த் 7  ம் தேதி குமாரின் மனைவி பத்மாதேவியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் அன்று மாலையே அவரை அவரது வீட்டில் விட்டுவிட்டனர்.

அப்போது வீட்டுக்குள் சென்ற குமாரின் மனைவி பத்மாதேவி, தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  உடல் முழுவதும் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ மனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

பத்மாதேவியை போலீசார் பாலியல் ரீதியாக  துன்புறுத்தியதாக புகார் எழந்துள்ளது. இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலாளரும், வழக்கறிஞருகுமான புகழேந்தியும், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாவட்ட அமைப்பாளரும், வழக்கறிஞருமான முருகேசன் ஆகிய இருவரும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr