ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹண மற்றும் பான் கீ மூனின் சிரேஷ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோருக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் குறிப்பிடப்படுகிறது.
நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பிலான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்கத்துடன் நிபுணர்கள் குழு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கக் கூடியவர்களைப் பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக