இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றத்தில் தாமதம் ஏதுமில்லை : கிளி. அரச அதிபர் _

JKR  வெள்ளி, 26 மார்ச், 2010

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளில் எந்த விதமான தாமதமும் கிடையாதென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் மேலும் 1500 குடும்பங்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவுக் அவர் தெரிவித்தார். தேர்த லுக்குப் பின்னர் மீண்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென் றும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 11,817 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப்பணிகள் நிறைவூ செய்யப்பட்டுள்ளன.
எக்காரணத்திற்காகவும் மீள்குடியேற்றம் தாமதமாகவில்லை. மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு தொடர்ச்சியாக மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இடம்பெயர்ந்து மீள்குடியேறக் காத்திருக்கும் மக்கள் திர்வரும் ஏப்ரல் எட்டாந் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளார்கள். அதனால் அவர்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களில் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வாறானவர்களைச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றால், அவர்கள் வாக்களிப்பதில் சிக்கலை எதிர்கொள்ளலாம்.
தேர்தலின் பொருட்டு எதிர்வரும் 29ஆம் திகதியுடன் மீள்குடியேற்றத்தை இடைநிறுத்த எண்ணியுள்ளோன். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படும்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr