இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் இரு அலுவலகங்கள் நேற்று திறப்பு

JKR  வியாழன், 4 மார்ச், 2010


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் பணிகளை இலகுபடுத்தும் வகையில் மாங்குளத்திலும், மாந்தை கிழக்கு மக்களின் பணிகளுக்கென பாண்டியன்குளத்திலும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் இரு அலுவலகங்கள் நேற்று (2010.03.03) திறந்து வைக்கப்பட்டன. மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இவற்றைத் திறந்து வைத்தார்.

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்ணம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இ;வ்விரு அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.

அதேவேளை, துணுக்காயில் 2718 குடும்பங்களைச் சேர்ந்த 6787 பேரும், பாண்டியங்குளத்தில் 2666 குடும்பங்களைச் சேர்ந்த 6216 பேரும், ஒட்டுச்சுட்டானில் 217 குடும்பங்களும் மீளக்குடியர்த்தப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களில் மல்லியாவளையில் 16 கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மல்லாவி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், வித்தியாலய ஆசிரியர்களுக்கான சைக்கிள்களை உடன் பெற்றுக் கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr