இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கையின் போர் குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் ஐ.நா.சபை வலியுறுத்து

JKR  வியாழன், 4 மார்ச், 2010


இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில்,சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இணங்கவேண்டும். அத்துடன் இதற்காக சர்வதேச நாடுகளும் உதவ முடியும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

ஜெனீவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் வருடாந்த அமர்வின் போது இன்று அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே நவநீதம்பிள்ளை இதனை வலியுறுத்தினார்.

கடந்த மே மாதத்தில், இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம், விமர்சனங்களை தகர்க்கும் வண்ணம் சமர்ப்பித்த தமது சொந்த யோசனை,சபையில் நிறைவேற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr