இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை விவகாரத்தில் அணிசேரா இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்பாடு

JKR  வியாழன், 11 மார்ச், 2010




இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி சேரா நாடுகள் அமைப்பு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்தறியாது பான் கீ மூன், தன்னிச்சையாக நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது குறித்து விசனம் தெரிவித்துள்ள அமைப்பு இது குறித்து தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அதிகாரம் கிடையாதெனவும் குறிப்பிட்ட சில நாடுகள் மீது மட்டும் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr