இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காதலனை கொன்று மாமிச விருந்துக்கு திட்டமிட்ட ஆஸி பெண்

JKR  புதன், 24 மார்ச், 2010

மெல்போர்ன்: காதலனை அடித்துக் கொலை செய்த ஆஸ்திரேலிய பெண் , பிணத்தை சாப்பிட திட்டமிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பெண் பிணத்தை தான் சாப்பிட விரும்பியதோடு மட்டுமல்லாமல் தன் நண்பனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி 'விருத்துக்கு வருகிறாயா' என்றும் அழைத்துள்ளார்.

மெல்போர்னில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 2008ம் ஆண்டு டேவிட் வாகன் என்பவர் தன் காதலியால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காதலனைக் கொன்றதாக மாலேஹன் என்ற 29 வயது பெண் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால் தான் மன நலம் குன்றியிருந்ததாகவும், அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மாலேஹன் தரப்பில் முறையிடப்பட்டது.
ஆனால் அரசு தரப்பு வக்கீல் மைக்கேல் ஓபிரெயின், மலேஹன் தரப்பு வாதத்தை மறுத்து வாதாடினார். அப்போது அவர் கூறுகையில்,
'மாலேஹன் தனது காதலனை, பூரண மனநலத்தோடு திட்டமிட்டு கொலை செய்துள்ளார். கழுத்தில் 16 முறையும், மார்பில் ஆறு முறையும் கத்தியால் குத்தியுள்ளார்.
அதோடு கொலை செய்த பின்னர் தனது மற்றொரு நன்பனுக்கு மாலேஹன் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
அதில் கொல்லப்பட்ட டேவிட்டின் மாமிசம் மிகவும் ருசியாக இருப்பதாக நினைக்கிறேன். சீக்கிரமாக வந்து விருந்தில் கலந்துகொள் என்று கூறிவிட்டு பிணத்தை அப்புறப்படுத்தியாக வேண்டும் வந்து உதவி செய் என்றும் தகவல் அனுப்பியுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது' என்று வாதிட்டார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr