இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பூம்புகார் கிராமத்திற்கு புளொட் சித்தார்த்தன் தலைமையிலான உயர்மட்டத்தினர் விஜயம்!

JKR  வெள்ளி, 26 மார்ச், 2010



வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்று வவுனியா பூம்புகார் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது பூம்புகார் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்விலும் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், இந்த பூம்புகார் பகுதியைப் பொறுத்தமட்டில் 70களின் இறுதிப்பகுதியில் காந்தீயம் அமைப்பினால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியாகும்.
இந்நிலையில் இப்பகுதி மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான தொடர்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நீண்டகாலமாக அறுந்திருந்தபோதிலும் இனி நமக்கிடையிலான நல்லுறவைத் தொடர்ந்து பேணவேண்டும். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாம் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr