இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புதிய அமைச்சர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி

JKR  வெள்ளி, 23 ஏப்ரல், 2010

மக்கள் ஆணையைப் பெற்று புதிய அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நாட்டின் முன்னேற்றம் கருதி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளர்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வின் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அமைச்சுப் பொறுப்பு எந்தவகையில் நாட்டுக்கு முக்கியத்துவம் மிக்கது என்பதை அனைவரும் உணர வேண்டும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் குடும்பமாக இருந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்ற வேண்டும்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அமைச்சர்களுக்கு உண்டு. குறிப்பாக தீர்மானம் எடுப்பதில் சிந்தித்து செயற்பட வேண்டும். சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டை வழிநடத்துவீர்கள் என நம்புகிறேன்” என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr