இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)

JKR  திங்கள், 3 மே, 2010


சுவிஸில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில் பேர்ன், சொலத்தூன் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் போட்டியிட்ட “சுரேஸ்” என்பவர் தனது ஊரின் பெயராலும் கோயிலின் பெயராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துவதைக் குறிப்பிட்டு இவரை நிராகரிக்கும்படி கோரி நாம் விடுத்த எமது அன்பான வேண்டுகோளை ஏற்று இவரை நிராகரித்து படுதோல்வியடையச் செய்த மக்களுக்கு குறிப்பாக இவரது புங்குடுதீவு ஊர் மக்களுக்கு எமது நன்றிகள்.
மேற்படித் தேர்தலை இவரது புங்குடுதீவு ஊர் மக்களில் 95வீதமானவர்கள் நிராகரித்து இத்தேர்தலில் கலந்து கொள்ளாததன் மூலம் இவரைத் தோல்வியடையச் செய்ததிற்கு மீண்டும் எமது நன்றிகள்! “இவ்வாறான தொலைநோக்குச் சிந்தனையுடன் நீங்கள் எடுத்த தீர்மானம் எமது சமூகத்தின் விடிவை நோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு மெருகேற்றும் என்பதில் ஜயமில்லை”!!!!
நாம் முன்பு விடுத்த அறிவித்தல் இது…..
தனது ஊர் மக்களுக்கு உதவப் போவதாக கூறிக்கொண்டு ஓர் அமைப்பைத் தொடங்கி சுவிஸ்வாழ் மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் கோயில்” என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை. தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு (சிடி) மூலம் வெளியிட்டு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த இந்த சுரேஸ் தற்போது எமது தேசியத் தலைவரையும், தேசியத்தையும் காட்டி பிழைப்பு நடாத்த புறப்பட்டுள்ளார். மக்களே உசார்!!! “நாடு கடந்த தமிழீழம்” எனும் பெயரில் புலியாதரவாளர்களையும் ஏமாற்றிப் பிழைக்க முனைகிறார் இந்த சுரேஸ்.. தேசமக்களே உசார்!!
-தேசியத்தலைவரின் உண்மையான விசுவாசிகள்!!

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr