இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இப்படியும் ஒரு வதந்தி நேற்றிரவு குடாநாட்டில்!

JKR  வெள்ளி, 7 மே, 2010


கையடக்கத் தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப் புக்களினைப் பெற்று அவர்களுடன் உரை யாடும் போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நேற்று இரவு யாழ். குடாநாடு முழுவதும் வதந்தி பரவியது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது :
கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங் களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) கார ணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள் ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது.
அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வ தாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவி னர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது.
இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.
இது தொடர்பாக "டயலொக்'' நிறுவ னம் எந்தச் செய்திகளையோ, குறுந்தக வல்களையோ வெளியிடவில்லை என் றும், இது மக்களைப் பீதியடையச் செய்ய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் "டயலொக்'' நிறுவனத்தின் யாழ். அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr