இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்குவது குறித்து எதுவும் கூற முடியாது : பீரிஸ்

JKR  வெள்ளி, 7 மே, 2010


"எதிர்காலத்தை என்னால் எதிர்வு கூற முடியாது என்பதனால் அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்குவது தொடர்பில் என்னால் எதுவுமே கூற முடியாது. தற்பொழுது அவசரகாலச் சட்ட விதிகளின் சில ஷரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே அரசுக்கு எதிரான பிரசாரங்களை இனிமேல் முறியடிக்கக் கூடியதாக இருக்கும்" என்று வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
புலிகளின் அபாயம் இன்னும் நீங்கவில்லை. சில குழுக்கள் இராணுவ களத்திலிருந்து அரசியலுக்கு திரும்புகின்றன என்பதனால் அவ்வாறான அபாயத்திற்கும் நாம் முகம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக செயற்படுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மை இல்லை. அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கூறியுள்ளது. பில் கிளிண்டனை சந்தித்த போது சுனாமிக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்தமையை நினைவுபடுத்தினார். அவருக்கு இந்நாட்டின் மீது அதீத அக்கறை இருக்கின்றது.
பூட்டானில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த சந்தித்த போது தெற்காசியாவில் பொருளாதார புத்தூர்ச்சி ஏற்படுவதாகவும் இந்தியா தனித்தன்றி தெற்காசிய நாடுகளை இணைத்துக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பானும் உதவுவதற்கு இணக்கம் கண்டுள்ளது. பாதுகாப்பு, நாணய மாற்று, கலாசாரம், சுகாதார சீர்கேடுகளை தடுத்தல் உள்ளடங்கிய விடயத்துடன் 'ஷங்காய்' ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகின்றது.
ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்குள்ள நிறுவனங்கள் நேரடியாக இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றன. வீடமைப்பு, மீனவர்களின் முன்னேற்றம், சக்தி போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
ஜீ 15 அங்கத்துவ நாடுகளின் மாநாட்டுக்கு ஜனாதிபதி செல்கின்ற போது முக்கிய நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
80 வீத கறுவா ஏற்றுமதி
சிறிய தீவான இலங்கையிலிருந்து 80 வீதமான கறுவாவே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவற்றை மேம்படுத்த தெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவுஸ்திரேலிய பிரதிநிதிகளுடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது மீள் குடியேற்றம் தொடர்பிலும் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் குறித்தும் திருப்தி தெரிவித்துள்ளனர்.
அவசரகால சட்டத்தின் ஒழுங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கு முடியும். எதிர்காலத்தை என்னால் எதிர்வு கூற முடியாமையினால் ஒழுங்கு விதிகளை முழுமையாக அகற்றுவது தொடர்பில் கூற முடியாது.
புலிகளின் அபாயம் இன்னும் முடிவடையவில்லை. இராணுவ களத்திலிருந்து குழுக்கள் அரசியலுக்கு திசை திருப்புகின்றன. அவ்வாறான அபாயத்திற்கு நாம் முகம் கொடுக்க வேண்டும்.
புலிகளை முறியடித்தது நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானதாகும். 100 இலிருந்து பூச்சியத்திற்கு உடனடியாகவே குறைக்க முடியாது ஏழு விதிகளை தளர்த்தியதற்கு கடந்த 75 மணித்தியாலங்களில் பல நாடுகளிலிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. பண்டங்களுக்கான வரிகளை நாங்கள் பலமுறை அதிகரித்துள்ளோம் என்பதனால் ஒழுங்கு விதிகள் தேவையானதாகும்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr