இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரஞ்சிதாவை விசாரிக்க உதவுமாறு நடிகர் சங்கத்திடம் கோரிக்கை

JKR  புதன், 5 மே, 2010


நித்தியானந்தாவுடன் பாலியல் புகாரில் சிக்கிய நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்துவதற்குத் தமிழ்நாடு திரைப்பட நடிகர், நடிகைகள் சங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் கர்நாடக சிஐடி பொலிஸார்.
இது தொடர்பான வீடியோ காட்சி, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து,
நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தலைமறைவானார்கள்.
நித்தியானந்தா மட்டும் இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நித்தியானந்தா மீதான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டுள்ள ரஞ்சிதா மட்டும் இன்னமும் தலைமறைவாகவே உள்ளார்.
அவரைப் பிடித்து வாக்குமூலம் பெற சிஐடி பொலிஸார் முயன்று வருகின்றனர். ரஞ்சிதாவே பொலிஸாருடன் அண்மையில் தொடர்புகொண்டு, பெங்களூர் வருவதாகத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரஞ்சிதாவுக்குப் பொலிஸார் அறிக்கை அனுப்பியுள்ளனர்.
ரஞ்சிதா இன்னமும் ஆஜராகாததால், அவரைத் தேடிக் கண்டுபிடித்து, விசாரணை நடத்துவதற்கு சென்னையில் உள்ள அவரின் வழக்கறிஞர் ஒருவரையும், தமிழ்நாடு திரைப்பட நடிகர், நடிகைகள் சங்க நிர்வாகிகளையும் சில நாட்களுக்கு முன் சந்தித்து உதவி கோரியுள்ளனர் சிஐடி பொலிஸார்.
அதற்கு அவர்களும், ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என்று அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை சிஐடி பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr