இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நிலநடுக்க ஆபத்தில் காப்பாற்றும் நாய்!

JKR  சனி, 1 மே, 2010


உங்கள் வீட்டில் நாய் வளர்க்கியர்களா? நிலநடுக்கம் போன்ற பேராபத்து காலத்தில் அது உங்கள் உயிரை காப்பாற்றும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேராபத்துகள் அடிக்கடி நிகழ்வதுண்டு. கால மாற்றத்தால் எல்லா நாடுகளின் பெருநகரங்களிலும் திடீர் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க உடைபோல் அணிந்து கொள்ளும் எச்சரிக்கை கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவாக இருக்கும் இந்த கருவியில் ஒன்றை உங்கள் வீட்டு நாயின் உடலில் பொருத்திவிட வேண்டும். மற்றொன்றை உங்கள் சட்டையில் பொருத்திக் கொள்ளலாம்.
நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் இருக்கும் இடத்தை நாயின் உடலில் பொருத்தி இருக்கும் கருவி மூலம் கண்டுபிடிக்கலாம். இந்த கருவியில் இருந்து உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு தகவல் செலும்படியும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். அத்துடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு முன்பாக நாய் வந்து நின்று விடுவதால் உங்களை கண்டுபிடித்து மீட்பது சுலபம். நிலநடுக்கப் பகுதியில் சோதித்துப் பார்த்து இந்தக் கருவி வெற்றி பெற்றுள்ளது. டென் மார்க் நாட்டின் கோபன்கேகன் இன்ஸ்டி டியூட் மாணவர் லூராபோபி மற்றும் குழுவி னர் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr